kalaignarseithigal.com/india/2
நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கேரள அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கூடுதலாக சத்துமிக்க உணவுகளை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒருநாள் தேங்காய் சாதம், அடுத்தநாள் சாதம், பழங்கள், பச்சைக்காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதைப்போன்று வாரத்தில் இரண்டு முறைக்கு மேல் பால் பாயாசம் மற்றும் கோழி கறி போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சில செய்திகள் படிப்பதே நெஞ்சு கனக்க செய்கிறது. அவ்வாறான ஒன்று:

thewire.in/women/delhi-riots-w

They Took Down Their Pants, Pointed Their Genitals at Us, and Said, 'Yeh Lo Azaadi''
Muslim women provide accounts of sexual taunts and violence by the right-wing mobs which attacked their homes in north-east Delhi.

இதுவரை யாரும் வண்ணாரப்பேட்டை காவல்துறை தாக்குதலில் இறக்கவில்லை என்றே பல பத்திரிகையாளர்கள் சொல்கின்றனர். இறந்ததாக சொல்லப்படுவது வதந்தி. ஆகவே, மக்களே இதுவரையில் அமைதியாக போராடினோம். எதிர் முகாம்கள் வன்முறைக்காக காத்திருக்கின்றன. அதற்கு இடம் கொடாமல் தொடர்ந்து குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை அமைதியாக முன்னெடுப்போம், வெல்வோம். இந்நாட்டை காத்திடுவோம்.

தமிழகத்தின் தென்கோடி குமரி, மேற்குப் பகுதி மேட்டுப்பாளையம், சென்னையில் பல இடங்கள், பழனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, புதுச்சேரிக்கு அடுத்த கோட்டக்குப்பம் என வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்களை லத்தியால் தாக்கி வன்முறையை நிகழ்த்தி கலைக்க யத்தனித்தது வண்ணாரப்பேட்டை காவல்துறை. அமைதியை விரும்புவர்கள் மீண்டும் அமைதியான முறையில் போரடுகின்றனர். வன்முறைக்கு இடமில்லை. காவல்துறைக்கு வெட்கமில்லை.

அமைதியான முறையில் போராடியவர்களை அராஜகமாக தாக்குதல் நடத்தியது வண்ணாரப்பேட்டை காவல்துறை. காவல்துறையின் காட்டு தர்பாரை கண்டித்து தமிழகத்தில் பல பகுதிகளில் மக்கள் போராட்டம். ஆம், இம்முறையும் வன்முறையில்லா போராட்டம். பேருந்துகளுக்கு வழிவிட்டு பின் ஒன்று சேர்ந்து போராட்டம். வன்முறையை ஏவுகிறது காவல்துறை. இம்மண்ணை நேசிப்பவர்கள் அமைதியாக போராட்கின்றனர்.

நேரு அவர்கள் துரோகம் இழைத்து விட்டார். படேல் ஒரங்கட்டப்பட்டார் என்ற பாசிச சக்திகளின் பொய்யை தொடர்ந்து முறியடித்து விட செய்வது ஒன்றே நம் வேலை...சலிக்காத வேலை...

theprint.in/opinion/nehru-neve

ஒரு நாள் நம்ம பிரதமரை காத்திட 1.56 கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்கிறது. அது சரி இந்த அரசிடம் இருந்து மக்களாகிய நம்மை காக்க யார் செலவு செய்வார்....?

indiatoday.in/amp/news-analysi

Aug' 19- 590.50
Sep'19 - 606.50
Oct'19 - 620.00
Nov'19 - 696.00
Dec'19 - 714.00
Jan'20 - 734.00
Feb'20 - 881.00
இப்படி உசந்துகிட்டே உசந்துகிட்டே போகுது சமையல் காஸ் விலை...

7 மாதங்களில் 49% என உயர்வு இருக்கிறது....

உங்க சம்பளம் இப்படி உசருதா....? !

இன்னும் பூமணி என்ற ஆளுமையை அறியாத ஆட்கள் போய் வாங்கி படியுங்க.. வாட்ஸப், டவுன்லோட், டேட்டாஸ்பீட், ஆன்லைன் என சலித்து போன வாழ்க்கையில் சற்று ஆசுவாசம் கொள்ள, வாழ்க்கை சுவாரசியமானதுதான் என சொல்ல வைக்க தமிழ் மண் சார்ந்த எழுத்துக்கள் உதவுகின்றன. நன்றி பூமணி சார்.
நாவலில் ஒரு இடத்தில் இப்படி ஓர் அம்மா சொல்கிறாள்: "எதுக்கு ஆடு மேய்க்க வேண்டும், நேரத்துக்கு சாப்பிட வராம.. பேசாம வீட்டிலேயே இருக்கலாமா இல்லையா? ".

இந்த ஆளுக என்னப்பா இப்படி... எல்லோரும் ஒரு திசையில் வேறு வழியில்லை என போனா இவிங்க எதிர் நீச்சல் போடுறாங்க... பாருங்க, மாநில பட்ஜெட் அட்டைப்படம். இதில் "ஆமாம், நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம்" என வசனம் வேற... அப்புறம் அம்மாநில பட்ஜெட்டில் எந்த பொதுத் துறையும் விக்கலயாம்... இந்த கம்யூனிஸ்ட் சேட்டனுங்க.....

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் & தயக்கம் இருந்தது. தயக்கத்தை போக்கியது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. பசங்க கிட்ட இந்த கதைகளை சொல்லாம விட்டுறக் கூடாது என நமக்கே ஒரு குறுகுறுப்பு வந்தால் அந்த கதைகள் சூப்பரு என்பது என் கருத்து. ஆமாங்க, அந்த வகையில இப்புத்தகம் புக்ஸ் பார் சில்ரனின் முக்கிய படைப்பு. ஆசிரியர் சுமங்களாவிற்கு வணக்கங்கள்

இதோ இந்த அவலமும் நடந்திருச்சு. எவனாவது குழந்தைகளுக்கு தைரியம் சொல்லிக் கொடுங்க என்று சொல்லி வந்தீங்கன்னா அசிங்கம் அசிங்கமா வைதிடுவேன்....சே ஒரு சமூகமாக எவ்வளவு தூரம் எத்தனை அசிங்கமாக தோற்று நிற்கிறோம்...!

முன்னுரையில் ராஜூ முருகன் சொல்வதைப் போல இவரது கதை மாந்தர்கள் அனைவருமே எளியவர்கள். எளிய மனிதர்களின் வாழ்வியல் துன்பங்கள், அவஸ்தைகள், சாதிய முரண்கள், முகம் அறியா நேச கரங்கள் என எல்லாமும் கதை களமாக்கியுள்ளார் கரீம் இயல்பாக. கரீமின் சாதுர்யம் கனமான விஷயங்களை, சமூக அவலங்களை மிக எளிதாய் நுட்பமாய் நமக்கு இயல்பாய் சொல்கிறார். நாம் அயர்ந்து போகிறோம்.

sramgopal.blogspot.com/2020/01

Citizen: We want jobs.
PM: We can defeat Pakistan in less than ten days.
Farmer: when will our incomes double?
PM: Just wait, we will occupy POK soon.
Citizen: When will economy recover?
PM: Let is first do NPR/NRC to thwart Pakistan. Bharat Mata Ki Jai!

From M.K.Venu of thewire.in

புதுச்சேரி கிராமங்கள் கடுமையான வேலையின்மை நிலவுகிறது. 100 நாள் வேலை 5 நாட்களாவது கொடுங்கள் என கெஞ்சல் நிறைந்து இருக்கிறது. அநேகமாக எல்லா கூட்டுறவு நிறுவனங்களும் மூடிவிழா காணப்பட்டுள்ளன. 100 ஆண்டு பழமையான மில் திறக்கப்படும் திறக்கப்படும் என பூச்சி காட்டிக் கொண்டு இருந்தது மூடப்பட்டுள்ளது...அரசால் ஒரு சிறு ரோட்டினை சீர் செய்ய கூட நிதி இல்லை. வேலை இல்லை, புதிய தொழிற்சாலைகள் இல்லை.

இது மாதிரி இல்லை இல்லை என்பதோடு கிரண்பேடி - முதல்வர் குடுமி புடி சண்டைக்கும் கொஞ்சமும் குறைவில்லை. ஆம் வெட்கமும் இல்லை

deccanherald.com/amp/opinion/p

Today, our elected government officially demonises not just Muslims, but all its other pet peeves—students, lefties, intellectuals, westernised elites, critics, political opponents, poha. Its campaign of slander, harassment, violence, imprisonment, exile, and exclusion targets our right to be here, our sense of belonging..

இந்திய குடியுரிமை சட்ட அபாயங்களை எப்படி சொல்வது என ரொம்ப மெனெக்கட வேண்டாம். சென்ற வாரம் பெங்களூருவில் ஒரு புரளியின் பின்னே சுமார் 200 வீடுகள் இடிக்கப்பட்டு சில ஆயிரம் illegal immigrants நடுத்தெருவில் விடப்பட்டனர். அவர்கள் பேரும் இந்தியர்கள் என இதுவரை நம்பப்பட்ட ஆவனங்களான (வோட்டர் ஐடி, ரேஷன் கார்டு என்பவை வைத்து இருந்தனர். இப்போது இந்த டிவிட் படியுங்கள்...
ஆமாங்க, ஏதுமற்ற எளியவர் வாழ்வில் அடுத்த இடியை கொடுப்பதற்கு தான் இந்த CAA. இஸ்லாமியர்கள் ஆக இந்த எளிய மக்கள் இருந்தால் அவ்வளவுதான்...

சிந்திக்க வைக்கிற நிறைய விவாதம் நடத்தப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள நூல் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடாக தோழர் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்ப்பில் "நீ கரடி என யார் சொன்னது" என்னும் ஃபிராங்க் தாஷ்லின் நூல் அழகிய வடிவமைப்பில்(உண்மையாகவே) எனக்கு தெரிய எழுத்துப் பிழை இல்லாமல் வந்திருக்கிறது. அவசியம் வாங்குங்க. ஆசிரியர்களாக இருப்பவர்கள் தங்களது பள்ளியில் இக்கதையை படிக்க செய்தோ அல்ல கதையாய் சொல்லியோ விவாதம் நடத்த முயலுங்கள். பசங்க ஜமாய்ப்பாங்க...
sramgopal.blogspot.com/2020/01

ஜி.செல்வாவின் இந்தப் புத்தகம் மிக முக்கியமான ஒன்று. களப் போராளிகளுக்கு வாசிப்பு அவசியம். அது இருக்கையிலே தான் மனிதர்களை அவதானிக்க செய்ய முடியும். ஜல்லிகட்டு போராட்டத்திற்கான போலீஸ் தடியடியில் சிக்கியவர்களை சிந்திப்பது, தாரிகாமி அவர்களுடனான சந்திப்பு என இப்புத்தகம் பல விஷயங்களை அருமையாக சொல்கிறது. வாசகசாலை அற்புதமாக வடிவமைத்திருக்கிறது. அவசியம் படிக்க வேண்டியவையாக நினைவுகள் அழிவதில்லை பகுதி இருக்கிறது.

sramgopal.blogspot.com/2020/01

Show more
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!