தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயலாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு இல. சுப்ரமணியன் IAS அவர்களை இன்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்

கிராமப் புறங்களில் வறுமை அதிகரிப்பு
பாஜக அரசின் சாதனை இதுதானா?

பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப் புறங்களில் சுமார் 10% அளவுக்கு வறுமை அதிகரித்திருப்பதாக அரசாங்கத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.

மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவது குறைந்துவிட்டது. இப்படியொரு நிலை கடந்த நாற்பது ஆண்டுகளில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்கிறது அந்தப்புள்ளி விவரம். இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தாலும் ஊடகத்தில் இன்று வெளியாகியுள்ளது

இன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘ சமத்துவப் பெரியார்’ கலைஞர் அறக்கட்டளைச் சொற்பொழிவின் துவக்கவிழா காட்சிகள்

இன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘ சமத்துவப் பெரியார்’ கலைஞர் அறக்கட்டளைச் சொற்பொழிவின் துவக்கவிழா காட்சிகள்

அன்புடையீர் வணக்கம்

தலைவர் கலைஞர் பெயரில் நான் நிறுவியுள்ள அறக்கட்டளையின் துவக்கவிழா நாளை நடைபெறவுள்ளது. தி இந்து ஆங்கில நாளேட்டின் Readers Editor திரு ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் முதல் சொற்பொழிவை நிகழ்த்துகிறார். இயன்ற நண்பர்கள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
ரவிக்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
விழுப்புரம்

There should be a legal bar against switching over alliances for forming government. It is against people mandate

இன்று கர்நாடகா எம் எல் ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது. ஆமாம், தமிழ்நாட்டின் 11 எம் எல் ஏக்கள் வழக்கு என்னதான் ஆனது?

நாளை கர்நாடகா எம் எல் ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது. ஆமாம், தமிழ்நாட்டின் 11 எம் எல் ஏக்கள் வழக்கு என்னதான் ஆனது?

12.11.2019 காலை 11 மணியளவில் திமுக தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்துக்காக பாராட்டு தெரிவித்தோம்

தன்மீது எவரும் காவிச்சாயம் பூச முடியாது என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் கூற்றை வரவேற்கிறேன்! பாராட்டுகிறேன்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பாராட்டியவர்களில் அவரும் ஒருவர். இந்திய பொருளாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிய அந்த அறிவிப்பு வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் அது சரியான முடிவு என்றுதான் திரு ரஜினிகாந்த் கருதுகிறாரா? அவரது நிலைபாட்டில் ஏதேனும்
மாற்றம் இருக்கிறதா?

திரு பி.எஸ்.கிருஷ்ணன் காலமானார்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் தலித் ஆதிவாசி உரிமைகளுக்காகக் குரல்கொடுத்துவந்தவருமான திரு பி.எஸ்.கிருஷ்ணன் (87) இன்று காலமானார். இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

எஸ் எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 வருவதற்கும், எஸ்சி / எஸ்டி சிறப்புக்கூறு திட்டம் உருவாவதற்கும் அவரே முதன்மையான காரணம். தலித் மக்கள் தமது நம்பகமான தோழரை இழந்துவிட்டனர்.

திரு கிருஷ்ணன் அவர்களுக்கு என் அஞ்சலி

“ உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது தீர்ப்புதானே தவிர நீதி அல்ல”

அயோத்தி தீர்ப்பு - எனது கருத்து

youtu.be/eOsZ-vqChas

“ ஒரு நீதிபதி ,தான் நீதியோடு நடந்துகொள்ள விரும்பினால் அவர் சட்டத்தைப் பிரயோகித்தால் மட்டும் போதாது. அவர் ஒவ்வொரு முறையும் சட்டத்தை மறுகண்டுபிடிப்புச் செய்யவேண்டும் அவர் பொறுப்பாக இருக்கவேண்டுமென விரும்பினால், அதற்கான முடிவெடுக்க நினைத்தால், அவர் வெறுமனே சட்டத்தைப் பிரயோகிப்பது பயன்தராது, அதை ஒரு குறிப்பிட்ட வழக்குக்கான சூத்திரமாகக் கருதக்கூடாது. அவர் தனித்துவமான ( singular ) அந்தத்தருணத்துக்கு ஏற்றவாறு ஒரு புதிய நீதியான உறவை மறுகண்டுபிடிப்புச் செய்யவேண்டும். ” - ழாக் தெரிதா

இன்று இந்து தமிழ் நாளேட்டில் வெளியாகியிருக்கும் எனது மதிப்புரை

பாபர் மசூதி வழக்கில் நாளை காலை 10.30 க்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தன்மீது எவரும் காவிச்சாயம் பூச முடியாது என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் கூற்றை வரவேற்கிறேன்! பாராட்டுகிறேன்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பாராட்டியவர்களில் அவரும் ஒருவர். இந்திய பொருளாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிய அந்த அறிவிப்பு வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் அது சரியான முடிவு என்றுதான் திரு ரஜினிகாந்த் கருதுகிறாரா? அவரது நிலைபாட்டில் ஏதேனும்
மாற்றம் இருக்கிறதா?

Show more
Mastodon

Server run by the main developers of the project 🐘 It is not focused on any particular niche interest - everyone is welcome as long as you follow our code of conduct!