பணம், முதலீடு, மூலதனம் இவை தான் இந்த உலகத்தை நகர்த்துகிறது, இவை தான் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது என்ற மூலதனத்தின் ஆதிக்கத்தை நிறுவ முயலும் முதலாளித்துவத்திடம், மூலதனம் என்றால் என்ன? அது எப்படி உருவாகியிருக்க முடியும்? இந்த உலகின் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

Follow

தன் வாழ்நாள் ஆராய்ச்சி மூலம், உலகில் இதுவரை தோன்றி மறைந்த ஓவ்வொரு காலக்கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் உழைப்பை நீக்கிவிட்டால் மூலதனம் என்ற ஒன்று இருக்க முடியாது, மதிப்பு என்ற ஒன்றும் இருக்காது.

உழைப்பு மற்றும் மூலதனம் இரண்டுமே ஒன்றாக இருக்க வேண்டும், உழைப்பவர்களிடம் இருந்து பிறக்கும் செல்வத்தை சுரண்டுவதன் மூலமே ஒரு சிலர் முதலாளிகளாக முடியும், உழைப்பவர்களுக்கே அவற்றின் பயன் கிடைக்குமெனில் முதலாளி-தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடும், ஏற்றத்தாழ்வும் இருக்காது, அரசாங்கம் அற்ற, வர்க்கமற்ற சமூகத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்று உரக்கச் சொன்ன Polymath தோழர் கார்ல் மார்க்சின் 200வது பிறந்த தினம் இன்று.

Sign in to participate in the conversation
Mastodon

Follow friends and discover new ones. Publish anything you want: links, pictures, text, video. This server is run by the main developers of the Mastodon project. Everyone is welcome as long as you follow our code of conduct!