தூங்கி தூங்கி வாழ்க்கையை தொலைத்தவன் என்ற பெயரெடுத்தவன் புலம்புகின்றான்.. கணவில் மட்டும் தான் வருகிறாள் விழித்திருந்தா வாழ்க்கையை தொலைப்பதென்று...

வாகனத்தில் வேகமாய் செல்பவருக்கு காற்று கண்களுக்கு ஒரு மெல்லிய திரையிட்டு அக்கம் பக்கம் இருப்போரை மங்களாக்கிவிடுகிறது...

😂

நானும் மலர் தான்..
சாலையோரத்தில் மலர்ந்தமையால் தூசிலும் மாசிலும் வாடிப்போய் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் போய்விட்டேன்..

சொல்லாமல் கரைந்து ஓடும் காலம்...
அதை கையோடு கட்டி வைக்க தாகம்..
கடிகார முல்லின் மீது கோபம்..
இந்த நொடியோடு உலகம் உறைய ஏக்கம்..

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே

-தொல்காப்பியம்

கனத்த பூட்ஸ்ஸுகலால் எவ்வளவு அழுத்தி தேய்தாலும் புல் முளைத்தே தீரும்
-டாஸ்டாய்

கிணற்றில் தவறி விழுந்து தத்தளிக்கும்போது.. தூக்க வரும் கைகளின் நிறம் கண்களுக்குப் புலப்படுவதில்லை...

பீட்டர்ஸ்பர்க் நகர வீடுகளுக்கு உயிரோட்டமும் உணர்வோட்டமும் கொடுத்தான் தாஸ்தோவ்ஸ்கி

என்ன சேதி? சுகம் தானே? நானும் நல்லபடியாக இருக்கிறேன். மே மாதத்தில் எனக்கு இன்னொரு மாடி கட்டப்போகிறார்கள்! என்றோ, வணக்கம்! என்னை பழுது பார்க்கப் போகிறார்கள், நாளைக்கு வேலை தொடங்குவார்கள் என்றோ, நான் தீப்பிடித்து எரிந்து போக பார்த்தேன், பயந்து நடுங்கிப்போனேன் என்றோ வீடுகள் சொல்வது போல் இருக்கும்.

"தனிமையின் ஆழமான குரல்கள்"

மகாபாரதக் கதை வளர்ந்தோட.. பீஷ்மன் வாய்க்கு பூட்டு போட்டான் வியாசன்...

டி என்ற சொல் உங்களுக்கு ஆணாதிக்க சொல்லாக தோன்றலாம்... அவர்கள் டா என்றழைத்தால் சிலிர்த்து போகிறார்கள் ஆண்கள்...


பரந்துபட்ட உலகில் ஆங்காங்கே சுழன்றுகொண்டிருக்கும் சூரைக்காற்று தென்றலை உள்ளே அனுமதிப்பதில்லை..
பாதுகாப்பு என கருதவேண்டாம்.. சுழன்றுகொண்டிருக்கும் இடத்தை சூரையாடிக்கொண்டிருக்கிறது...


நான் தமிழன் - தமிழ் நாட்டில் பிறந்த மனிதன்
நான் இந்தியன் - இந்திய நாட்டில் பிறந்த மனிதன்
நான் இந்து - இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மனிதன்
நான் கிருத்துவன் - கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்ட மனிதன்
நான் முஸ்லீம் - இஸ்லாமியத்தை ஏற்றுக்கொண்ட மனிதன்
நான் கம்யூனிஸ்ட் - கம்யூனிஸத்தை ஏற்றுக்கொண்ட மனிதன்
நான் ஆத்திகன் - கடவுள் இருப்பை ஏற்றுக்கொண்ட மனிதன்
நான் நாத்திகன் - கடவுள் இருப்பை ஏற்றுக்கொள்ளாத மனிதன்
.
.
.
நான் யார் - மனிதன்
என் குணம் - அன்பு....

ஏமாற்றம் என்பது எதிர்பார்ப்பின் தோல்வியென்றால்.. நான் என்ன எதிர்பார்த்தேன் என்பதை அறியாமல் என்னை ஏமாலி என பட்டமிடுபவர்களை கணானும்பொழுது புண்ணகை கலந்த பரிதாபத்திற்கு என் முகம் இலக்கணம் எழுத தொடங்குகிறது..


வானத்தில் பறக்கும் பஞ்சவர்ண கிளியின் மீது அதீத காதல்..
அது என் தோலில் வந்து அமரவில்லையே என நான் ஏங்கவுமில்லை..
என்றும் என்னோடே இருக்கவேண்டும் என எண்ணியதுமில்லை..
அதை காதலிப்பதால் அதை பறக்கவிடுகிறேன்


Mastodon

Follow friends and discover new ones. Publish anything you want: links, pictures, text, video. This server is run by the main developers of the Mastodon project. Everyone is welcome as long as you follow our code of conduct!