cosmo_bird is a user on mastodon.social. You can follow them or interact with them if you have an account anywhere in the fediverse. If you don't, you can sign up here.

ஒரு குழு/ஒரு சமூகம்/ஒரு சங்கம், ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது/வளரும்போது, அது வளர்ந்த தளத்திலிருந்து எவ்வாறு புரிந்துணர்வோடு செயல்பட்டு பொருளாதார நிலையில் சுதந்திரமடைந்து, சுயசார்புடைய தன்மையை அடையமுடியும் ?

cosmo_bird boosted

இந்தியாவில் கம்யூனிசம் பற்றி பேசும் பொழுது அரசு சோசலிசத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். மக்களுக்கான அரசு என்கிறோம், அனார்கிசம் பற்றியோ அல்லது கம்யூனிசம் பற்றி இன்று பேசாமல் சோசலிச அரசை அமைத்தும் பயனில்லை. எனவே நான் கூற விரும்புவதெல்லாம் இளம் தலைமுறையினரிடம் கம்யுனிசம் அனார்க்கிசம் இரண்டையும் ஒன்று சேரதான் அறிமுகப்படுத்த வேண்டும். உறப்த்திக் கருவிகளின் தன்மைகள் மாறிவிட்டன. Decentralization நோக்கி நகர வேண்டிய தருணம் வந்தாகிவிட்டது.

cosmo_bird boosted

அந்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டே ஜனநாயக கூட்டுறவு போன்ற மாற்றுகளை முன்னெடுக்காத எந்த ஒரு இடதுசாரி அரசும் நிச்சயம் தேக்கமடைந்து வலதுசாரிகளிடம் தோல்வியையே தழுவும். ஏனெனில் மக்கள் இன்னும் மாற்றுக்கு அரசு இயந்திரத்தையே நாடுகின்றனர். எனவே நாங்கள் தான் மாற்று என்று வலதுசாரிகள் அவர்களை ஈர்க்கிறார்கள்.

cosmo_bird boosted

மறுப்பு என்பது இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக கொடிபிடித்து கோஷம் போடுவது அல்ல, அதைதான் வலதுசாரிகள் செய்வார்கள் . இங்கே மறுப்பு என்பது அரசு இயந்திரத்தின் வரைமுறைகளை மக்களுக்கு புரியவைத்து, அரசு என்னும் இயந்திரம் இருக்கும் வரை முதலாளித்துவத்தை தோற்கடிக்க முடியாது என்கிற புரிதலை மக்களுக்கு கொண்டுவர தவறுவதை தான்.

cosmo_bird boosted

இங்கே அரசை எதிர்க்க வேண்டும் என்பது, வலதுசாரிகளோடு சேர்ந்து நாமும் இடதுசாரி அரசைப் பார்த்து அரசு பயங்கரவாதம் என்று கூக்குரலிடத் தேவையில்லை. மாறாக இங்கே எதிர்ப்பு என்பது அரசு வாதத்தைதானே தவிர. இதை செய்யத தவறிய காரணத்தால் தான் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் சரி தொடர்ந்து ஆட்சியில் தேங்கிவிட்ட இடதுசாரி அரசுகளை வலதுசாரிகளால் கவிழ்க்க முடிந்தது.

இயக்கவியலை சரியாக புரிந்துக் கொண்டால், இது நன்றாக புரியும். அரசை மறுப்பது நிலைமறுப்பின் நிலைமறுப்பு தானே!

cosmo_bird boosted

இந்த அரசு அல்லது அந்த அரசு என்று அரசு இயந்திரத்தை சுற்றியே தான் விவாதம் நடந்துக் கொண்டிருக்கிறதே தவிர, உண்மையான மக்கள் ஜனநாயகத்திற்கு மத்தியப்படுத்தப்பட்ட அரசும் எதிரிதான் என்கிற புரிதலுக்கு நாம் நகர்ந்துச் செல்ல மறுக்கிறோம். இதுவே பொதுவுடைமை சமூகத்திற்கு மக்களை தயார் படுத்துவதில் ஏற்படும் மிகப்பெரிய தேக்கம். ஆயினும் கேரளத்தில் இயங்கும் இடதுசாரிகள் இதனை முழுதும் உணர்ந்துதான் செயல்படுகின்றனர், இல்லையெனில் இந்தியாவில் கூட்டுறவு உற்பத்தி உறவுகள் பலமாக இயங்கும் மாநிலமாக கேரளா இன்று இருக்காது.

cosmo_bird boosted

வலதுசாரிகள் ஆட்சியமைக்கும் பொழுது இடதுசாரிகள், ஜனநாயக உரிமை பரிபோயிற்று, அரசு பயங்கரவாதம் என்று வாதிட்டால், அதே வாதத்தைத் தான் வலதுசாரிகளும் இடதுசாரிகளின் மீது சுமத்துகின்றனர். உதாரணத்திற்கு தற்போது இந்தியாவில் மத்தியில் வலதுசாரி அரசான பா.ஜ.க-வை இந்தியாவின் இடதுசாரிகள் எதிர்க்கும் அதே நேரத்தில், கேரளத்தில் வலதுசாரி பா.ஜ.க இடதுசாரி அரசாங்கம் மீது இதே பழியை சுமத்துகிறது. அரசியல் படுகொலைகள் நடக்கிறதா என்றால் ஆம் இருபக்கத்திலும் நடக்கிறது.

cosmo_bird boosted

உண்மையில் கம்யூனிஸ்ட் என்பவனும் அனார்க்கிஸ்ட் என்பவனும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகள். கம்யூனிஸ்ட் என்று கருதிக் கொள்ளும் ஒருவர் எப்போது அரசு என்பதை முற்றிலும் மறுக்கிறாறோ அப்போது தான் அவர் உண்மையில் கம்யூனிஸ்ட் அல்லது அனார்க்கிஸ்ட். இல்லையேல் அவரை அரசு சோசலிசவாதி எனலாம். ஒரு புரட்சிகர சோசலிஸ்டும் அரசை எதிர்ப்பதன் மூலம் கம்யூனிஸ்டோ அல்லது அனார்க்கிஸ்ட் ஆகிறார்.

cosmo_bird boosted

"அனார்க்கிசம்-னா என்ன? கம்யூனிசத்திற்கும் அதுக்கும் என்ன வேறுபாடு?" என்று பொதுவுடமை சித்தாந்தத்தை கற்றுக் கொண்டிருக்கும் தோழர் என்னிடம் கேட்டார்.

அடைய வேண்டிய இலக்கைப் பொறுத்த வரை அனார்க்கிஸ்ட்டும் கம்யூனிஸ்ட்டும் வேறுவேறானவர்கள் இல்லை. இருவரையும் ஒன்றிணைக்கும் வார்த்தைதான் பொதுவுடைமை. இருவருமே வர்க்க வேறுபாடுகள் இல்லாத, அரசு இல்லாத சமூகத்தை அடையவே பிரகடனப்படுத்துகின்ற்னர். இருவரும் எங்கே வேறுபடுகின்றனர் எனில், இந்த இலக்கை எப்படி அடையப் போகிறோம் என்கின்ற நடைமுறை யுக்திகளில் தான் .

cosmo_bird boosted

We are starting a library on the occasion of our anniversary that falls on 14th April 2018 . All are welcome Special thanks to @SFLCin for generously sponsoring the library and donating two laptops to center. #Library #ambedkarjayanti #anniversary

discuss.fsmk.org/t/ac3-anniver

#FSMK #FreeSoftware #CommunityCenter

All are welcome :)

cosmo_bird boosted

After a long time, Interacted with College Students in Karaikudi. Institutions doesn't play much role in the growth of the students and the local Organisation/GLUG holds the responsibility to enrich these resources.

cosmo_bird boosted
cosmo_bird boosted

you know, developing an open source app with a community is so much more fun than coding for a corporation where you bosses tell you what to do and you don't get any feedback from actual users

cosmo_bird boosted

Citations are as important to #science as hyperlinks are to the web. What if the entire citation graph was available as open data? We're getting closer to this being a reality. Dario Taraborelli, who leads Wikimedia's research team, writes on Boing Boing about the Initiative for Open Citations (i4oc.org/):

boingboing.net/2018/04/14/open

#opendata #openaccess

cosmo_bird boosted

every time I see the words Venture Capitalists I automatically read that as Vulture Capitalists

Patents, IP's Paywalls:
மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமே ஆகும். ஆதலால் செயற்கை முறைகளும் அதனுள்ளே அடங்கும். எப்போது அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் சொத்தாக பார்க்கப்பட்டதோ அன்றே அது அறிவற்ற செயலாக கருதப்படிருக்கவேண்டும். முன்பு கூறிய availability, accessibility, affordability, இவையும் முரண்கள். பேடன்ட்களையும், IP, Paywall களையும் களையாமல் நாம் அறிவியல் உலகத்தில் இருக்கிறோம் என் கூற இயலாது. அது பொய்யாகும். ஆனால் அந்த நிதர்சனத்தை ஒப்புக்கொள்வதே அறிவியலின் மனப்பான்மை வளர்ந்திருப்பதை காட்டுகிறது.

profiteering:
முன்பே கூறியது போல், இலாப மற்றும் கொள்ளை இலாபத்துக்காக இயங்கும் ஒரு தனியார் அமைப்பு அறிவியலை வளர்ப்பதால் ஆதாயல் அடையுமா என்தையே முதன்மையாக கொள்ளும். வெற்றி, தோல்வி என்று மட்டுமே அராய்ச்சியை பார்க்கும். இதே காரணத்தால் தான் கல்வி மற்றும் ஆரய்ச்சி மக்களிடமும், தேவையானால் மக்களால் இயக்ககூடிய அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அதன் மூலமாகவே, சார்பற்ற ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் எவ்வித பொய்யும் இன்றி மக்களிடம் கொண்டுசேர்க்க இயலும். இல்லையேல், நாடு தனியார் மயமாகும்.

ஒரு தனியாரை நம்பி எப்போதும் அறிவியல் அராய்ச்சி மேற்கொள்வது எப்போதும் நன்மையில் முடிந்ததில்லை. இக்காலகட்டத்தில் அறிவியாலர்கள் தமக்கும் சமுதாய நிலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என கூறவே முடியாது. இக்காரண்த்துக்காகவே அறிவியலார்களால் அறிவியால் தனியார் மயம் கூடாது. அறிவியலை விற்கவம் வாங்கவும் இயலாது, கூடாது. அறிவால் ஆரய்ச்சியில் ஈடுவடுவர்களை சமுதாயம் தாமாகவோ, அரசு மூலமாகவோ பொருளாதார உறுதுணை புரியவேண்டும். தவிற எப்போதுமே வேறு வழிகளையும் கண்டறிய முனையவேண்டும். தடைகளை தகர்க்ககூடிய அறிவியல் வேண்டும்.

funding dependency:
அறிவியல் பொருளதாரத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையது. அறிவியலாளர்கள் தினசரி சாப்பிட வேண்டும். ஆராய்ச்சியல் ஈடுவடுவோருக்கு தக்க செலவுகள் ஈடுகொடுக்க பலமான பொருளாதார துணை வேண்டும். எப்போது அது நிறுத்தப்படுகிறதோ அப்போதே, முயற்சிக்கும், அறிவியல் செயலுக்கும், முன்னேற்றத்துக்கும், தடையாகும். இதுவே அறிவியல் இயக்குபவர்களுக்கு பயத்தை உண்டு செய்கிறது. இத்தகைய முறை சுதந்திர சிந்தனையை முதலில் முடக்கும். இதுவே பொருளாதார கட்டுப்பாட்டு முறையாக ஒரு சனநாயக அற்ற அரசு செயல்படுத்தும்.

gov. threat:
குடியாட்சியில் இயக்கப்படும் சனநாயக அரசாங்கம், அரசியல் அமைப்பை, மக்களின் நலனுக்காக செயல்படக்கூடிய இயக்கமாக இருக்க வேண்டும். எப்போது அத்தகைய நிலைமை சீர்குலைகிறதோ, அப்போது அறிவியல் கருத்து முரணால் அரசை ஆதாரங்களுடன் குற்றக்கூறுகிறதோ, அப்போது பெரும்பான்மை அறியாமையில் இருப்பவரை வைத்து குற்றங்கூறுபவர்களை மிரட்டும். இதுவே நீதி அல்லாத சட்ட இயற்றலுக்கு அடிப்படையாக இருக்கிறது. அத்தகைய அரசை மாற்ற கூடிய நேரம் வந்துவிட்டது என்பது பொருள்.